முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான போதும், அவரிடம்வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்க, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் முன்னாள் அமைச்சரும்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியூதீன் ஆகியோருக்கு, நேற்று அழைப்புவிடுக்கப்பட்டது.
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒரு சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இராணுவதளபதிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு, முன்னாள் அமைச்சர்ரிஷாத் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கம் கோரவே இருவருக்கும் தெரிவுக்குழுஅழைப்பு விடுத்தது.
அந்தவகையில், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடியது.
இந்த நிலையில், முதல் சாட்சியமாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயகவிடம், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அடுத்து பிற்பகல் 3.00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சென்ற நிலையில், அவசர கூட்டம் ஒன்று இருப்பதன் காரணமாக, எதிர்வரும் 28 ஆம் திகதி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய, பாராளுமன்றதெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
அதனையடுத்து முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அங்கிருந்து வெளியேறினார்.






