குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பளிக்கும் பிரிவிற்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று சென்றிருந்தார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் உதவி மற்றும் பாதுகாப்பளிக்கும் பிரிவில், அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்தவகையில், முறைப்பாடு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே இன்று சென்றிருந்தார்.
இந்த நிலையில், ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக செய்த முறைப்பாட்டிற்கு, மேலதிக தகவல்களை வழங்கவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். (சி)






