மீரிகம புகையிரத கடவையில் இன்று காலை டிப்பர் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து பிரதான ரயில் பாதையில் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீரிகம – திவுலபிட்டிய பிரதான வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனம் மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணித்துள்ளது.
ரயில் கடவையை மீறி லொரி பயணிக்க முட்பட்டதினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleமலையகத்திலும் தபால் சேவைகள் பாதிப்பு!
Next articleகார் விபத்தில் தந்தை – மகள் பலி:மூவர் காயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here