அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக்கோரி, உண்ணாவிரதத்;தில் ஈடுபட்டிருந்த கல்முனை ஸ்ரீ சுபத்திராராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன் முதுகலசங்கரட்ண தேரருடன், கல்முனை சிவில் சமூகப் பிரதிநிதிகள், இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்பில், கல்முனை சூரியகாந்தி சகவாழ்வு மன்றத்தின் உப தலைவர் இ.இராசரெத்தினம், செயலாளர் எஸ்.காந்தருபன், இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் செயலாளர் கே.நடராஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ்ப் பிரிவு தேசிய இணைப்பாளர் என்.எஸ்.தயானந்தன், தமிழர் ஊடக மையத்தின் தலைவர் ரி.தர்மேந்திரா உட்பட பலர் இணைந்து கொண்டனர். (சி)

Previous articleகதிர்காமத்திற்கான காட்டுப்பாதையில் 3 நாட்களில் 7163 பேர் பயணம்
Next articleதென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு