நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில், அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதவேளை, இந்த சந்திப்பிற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதில், தொழிற்சாலைகளின் ஏலம் உட்பட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளது. (சி)

Previous articleகுண்டுத்தாக்குதலுக்கு பின் அரசியல் தீவிரம்!
Next articleபெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் : ஜி.எல்.பீரிஸ்!