வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாடு விழா – 2019, இன்று நடைபெற்றது.

பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலமையில், நிகழ்வுகள் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார மண்டலத்தில், அண்ணாவி துரைச்சாமி அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி பண்பாடு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உதவிச் செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன், பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக, மூத்த பத்திரிகையாளரும் வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சி.சிவகுமார் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, கருத்துரைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல் மற்றும் கௌரவங்களை வழங்கி வைத்தனர்.

இதில், நுண்கலை இளமானி ச லவ்லி குழுவினரின் இறை இசை பாடல்கள், மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் வாள் இசை நடனம், உடுத்துறை மகா வித்தியாலய மாணவர்களின் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு தாழ லயம், நுண்கலை மானி றதீஸ் குழுவினரின் யாழிசை, அம்பன் அண்ணாவியார் வரதாராசா குழுவினரின் கிராமிய இசை பாடல்கள் ஆகியன இடம்பெற்றன.

நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச கலைஞர்கள், பொது மக்கள் நலன்விரும்பிகள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான சி.பிரசாத், வே.பிரசாந்தன் வி.றஜிதா, செ.செபஸ்ரியன், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் வே.தவச்செல்வம் உட்பட சுமார் 500 பேர் வரை கலந்துகொண்டனர். (சி)

Previous articleமட்டு, சத்துருக்கொண்டான் வீதி புனரமைப்பு
Next articleசம்தந்தனின் நடவடிக்கை தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் : அனந்தி