யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.இணை
தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச.அரியகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள், கடற்றொழிலாலாளர் கூட்டுறவு சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் என நூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.(சி)