யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு
விவாத்த்திற்கு விடப்பட்டது.
இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வாக்கெடுப்பில், முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிற்கு ஆதரவான தமிழ்த் தேசிய மக்கள் முன்னயிணியின் 10 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 11 உறுப்பினர்களும்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினருமாக 24 உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இதற்கமைய யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால்
நிறைவேற்றப்பட்டது.
யாழ்.மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது
