யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்களது இந்த நியமனம் சரியானதென்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் படியும் வைத்தியர்களுக்கான சேவைப்பிரமாணகுறிப்பின் படியும் அண்மையில் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் அடிப்படையிலும் வைத்தியர்களுக்கான நியமனம் மத்திய அமைச்சிற்குரியதென்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் தான் பதவியேற்று குறுகிய காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திய வைத்தியர் சத்தியமூர்த்தியின் சேவை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடரும் என்ற செய்தியை அறிந்து வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் மக்களும் மகிழ்சியிலுள்ளனர்.

Previous articleதீயில் கால்வைத்த மூதாட்டி தீயில் எரிந்து மரணம்!
Next articleகிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)