யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன், தனது அடிப்படை உரிமை தொடர்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து தன்னை நீக்கி, ஜனாதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி, பேராசிரியர் இரட்ணம் விக்கினேஸ்வரன் தாக்கல் செய்ய அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை, எதிர்வரும் செப்டம்பர் 27திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அத்தோடு, பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனைப் பதவி நீக்கியது உரிய சட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றிதான் என்பதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி சார்பில் உத்தியோகபூர்வ பிரதிநிதியிடமிருந்து சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்குமாறும், சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

முன்னதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவிவகித்த பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருந்ததுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கதிகாமநாதன் கந்தசுவாமி உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, பதவி அநீக்கப்பட்ட முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை கடந்த மே மாதம் தாக்கல் செய்திருந்தார்.

Previous articleமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்தவிற்கு ஸ்ரீ.சு.க அழைப்பு!
Next articleரஸ்ய போர் விமானம் மீது துப்பாக்கி சூடு