யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, புனரமைப்பு ஆரம்பம் தொடர்பில் அமைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்ததுடன், புனரமைப்பு பணிகளையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, சிவில் விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜெயம்பதி, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். இந்திய துணைத்தூதுவர், அரச அதிகாரிகள், பொது மக்கள் என பலர் பங்கேற்றனர். (சி)

Previous articleமக்களின் வறுமை வீதம் அதிகரிப்பு : அமரவீர
Next articleபிரபாகரனை இழிவு படுத்துவது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் – இராதாகிருஸ்ணன்