யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 9 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோதல் சம்பவமானது நேற்றிரவு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையேயே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, மோதல் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(சே)