யாழ்ப்பாணம் தீவகத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் தீவகத்தில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் நீர் நிலைகளில் தற்போது அதிகளவான வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு, வெளிநாட்டுப் பறவைகளை பார்வையிட பலர் தீவுப் பகுதிக்கு வருகைதருவதோடு, பறவைகளை புகைப்படங்களும் எடுத்துவருகின்றனர்.
அவுஸ்ரேலியா, சுவிட்சர்லாந்து, ரஸ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜூரியா, சைபிரியா ஆகிய நாடுகளில் இருந்து தீவத்திற்கு வருகை தரும் வலசைப்பறவைகள், ஏப்ரல் முதல் மே மாதம் வரை தங்கியிருந்து குஞ்சு பொரித்து பின்னர் அவற்றுடன் தமது வாழ்விடம் நோக்கி பறந்து செல்லும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தீவகத்தில் தற்போது, 23க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் தங்கியுள்ளதுடன், இதில் நாரை இனங்கள், அன்னப்பறவை இனங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)






