மத்திய கல்வி அமைச்சினால் யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் லோகேஸ்வரனினால் இக்கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் கே.தவகீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(சி)