யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து, மன்னார் மடுத்தேவாலயத்திற்கு செல்லும் 150 ற்கும மேற்பட்ட யாத்திரீகர்கள், நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி ஊடாக மடு நோக்கி, பாத யாத்திரை சென்றுள்ளனர்.

மன்னார் மடுத் தேவாலயத்தின் ஆடி மாத திருவிழா, எதிர்வரும் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா பங்கிற்கு உட்பட்ட, சுமார் 150 ற்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள், ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆனையிறவு ஏ-9 வீதி ஊடாக கொக்காவில் சந்தையைச் சென்றடைந்து, அங்கிருந்து ஐயன்கன்குளம், தேறாங்கண்டல், மல்லாவி ஊடாக நட்டாங்கண்டலைச் சென்றடைந்து, நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி ஊடாக மடுவிற்கு செல்கின்றனர்.

இன்று நட்டாங்கண்டலில் இருந்து பாலம்பிட்டி வரை செல்லும் யாத்திரீகர்கள், சுமார் 19 கிலோ மீற்றர் நீளமான தூரம் காட்டுப் பாதையினால் பயணிப்பதில், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் மத்தியிலும், வருடம் தோறும் யாத்திரை மேற்கொள்ளும் மக்கள், இம்முறையும் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். (சி)

Previous articleநியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
Next articleஆயுதம் ஏந்தினால் தான் தீர்வு கிடைக்குமா? : சம்பந்தன்