யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று, உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.

 

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிளில் சென்ற 6 நபர்கள், வீட்டுக்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

 

Previous articleமட்டு, சத்துருக்கொண்டானில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்
Next articleமக்களை ஏமாற்றும் கூட்டமைப்பு : அரசுக்கு ஆதரவு