யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆனைக்கோட்டை உயரப்புலம் பிடாரி அம்மன் கோவில் பகுதியில், வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசு கார் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டு கண்ணாடிகளும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களால், புதிதாக அமைக்கப்பட்ட வீடு, கிரகப் பிரவேசம் செய்து வைக்கப்பட்டது.
இதன் போது அயலவர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவர், உணவருந்தாமல் சென்றதனால், வீட்டு உரிமையாளருக்கும் அந்த பிரிவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், சொத்துக்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
6 மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர், கத்தியுடன் வருகை தந்ததாகவும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து உடைத்ததாகவும், வீட்டின் கண்ணாடிகளை உடைத்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாகவும், வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)