வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்த பட்டதாரிகளே இன்று போராட்டதினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, ஆட்சியாளர்களின் வாக்குறுதிகள் பொய்யானது, அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கு, ” வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம்”, அணைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்,”பதிவு செய்யப்படாதவர்களை உடனடியாக பதிவு செய்” நிஜமனத்தில் உள்வாரி,வெளிவாரி என்ற பாகுபாடு வேண்டாம் போன்ற வாசகங்களை தாங்கியவாறு வேலையற்ற பட்டதாரிகள் கவனீர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)