நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால், மொனராகல மாவட்டத்திலுள்ள இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

இதனால் சேனநாயக்க சமுத்திரத்தில் பெருமளவு நீர்வற்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 7 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி நீர் கொள்ளளவை சேனநாயக்க சமுத்திரம் கொண்டுள்ளது. ஆனால் அந்நீர் மட்டம் இன்று வெறும் 36 ஆயிரம் ஏக்கர் அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்நீர் குறைந்த வேளாண்மைச் செய்கை, குடிநீர் மற்றும் மீன்வளர்ப்பிற்கு மாத்திரமே போதுமானதாகும் என, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். (மு)

Previous articleஉயிரிழந்த இராணுவ வீர்களின் ஊதியத்தில் கை வைத்தது அரசு
Next articleகன்னியா விவகாரம் : மேல்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நான்கு கட்டளைகள்!