மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் முழுமையாக விளையாட இந்தியா அணித்தலைவர் தீர்மானித்துள்ளார்.

மேற்கிந்திய அணிகளுக்கும் இந்தியா அணிக்கும் எதிராக, எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில், முழுமையாக விளையாட இந்திய அணித்தலைவர் விராட் ஹோக்லி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20-20 போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதனடிப்படையில் முதலாவது 20-20 போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளில் விராட் ஹோக்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ரோகித் சர்மா அணித்தலைவராக நியமிக்கப்படுவார் என்றும், ஹோக்லி டெஸ்ட் போட்டிகளிலேயே பங்கேற்பார் எனவும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் தான் விளையாட விரும்புவதாக இந்திய அணித் தலைவர் விராட் கோலி, தேர்வு குழுவினரிடம் கூறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தில் கோலி முழுமையாக இடம்பெற வாய்ப்புள்ளது. (நி)

 

Previous articleநேபாளத்தில் கடும் மழை:88 பேர் பலி!
Next articleமரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டாம்:மஹிந்த!