மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து, இன்று காலை முதல் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டதக்கது. (நி)

 

Previous articleபீகாரில் சீரற்ற காலநிலை:67 பேர் உயிரிழப்பு!
Next articleகினிகத்தேனையில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு! (காணொளி இணைப்பு)