முஸ்லிம் திருமணம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய காரணங்களை உள்ளடக்கிய யோசனையை நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்க முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் இந்த யோசனைகள் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இத் திருத்தத்தை அமைச்சரவை அனுமதியைப் பெற்று, நாடாளுமன்றத்தில் அதனை முன்வைத்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.(சே)

Previous articleக.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 5இல் ஆரம்பம்
Next articleஅரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்-மாவை