வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொட்டுவை வாராந்த சந்தையில் முஸ்லிம்கள், வியாபாரம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு குறித்த சந்தைக்கு முஸ்லிம் வியாபாரிகள் வருவதற்கு மக்களும், வர்த்தக சங்க உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
எனவே, பிரதேசத்தில் அமைதியை கருத்திற்கொண்டே தற்காலிகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேரா கடிதம்மூலம் அறிவிப்பு விடுத்துள்ளார்.(சே)









