முல்லைத்தீவு வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்ல பழைய மாணவர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், செவிப்புலன், கண்புலன் அற்ற மாணவர்களை கற்பிற்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள இனிய வாழ்வு இல்லம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து இயங்கி வந்துள்ளது.
இதில் கல்வி கற்ற 50 ற்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வியை கற்று வெளியேறி, பட்டதாரிகளாகவும், நிறுவனங்களிலும் தொழில் புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பழைய மாணவர்கள் பலர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இனிய வாழ்வு இல்லம் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் என்றாலும் பிறரிடம் மண்டியிட மாட்டோம்.
எம்மை புறக்கணிக்கும் உன்னை நாம் புறக்கணிப்போம். என்ற கோரிக்கைகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
01) நிருவன ஸ்தாபகரின் செயற்திட்டத்தில் வந்த யாப்பு பின்பற்றப்பட வேண்டும்.
02) நிறுவன ஸ்தாபகரின் வழித்தோன்றல் பிரகாரம் நிருவனம் ஒப்படைக்கப் பட வேண்டும்.
03) நிர்வாக செயற்பாடுகளில் பழைய மாணவர்களை தொடர்ச்சியாக புறக்கணிப்பதை நிருத்த வேண்டும்.
04) பழைய மாணவர்கள் நிபந்தனை அற்ற வகையில் பொதுச்சபையில் இணைக்கப்பட வேண்டும்.
05) அனைத்து பழைய மாணவர்களையும் உள்வாங்காமல் மேற்கொள்ளப்படும் யாப்பு சீர்திருத்தத்தை நிருத்த வேண்டும்.
06) சமூக சேவை திணைக்களத்தின் அரச உத்தியோகத்தராக இருந்து கொண்டு நிறுவனங்களை மேற்பார்வை செய்யும் ஒருவர் செயற்குழுவில் இருந்து வெளியேற வேண்டும்
07) மக்கள் பிரநிதியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் செயற்குழு மற்றும் நிர்வாக பதவி நிலையில் இருந்து வெளியேற வேண்டும்.
08) 11 உறுப்பினர்களை கொண்ட செயற்குழுவில் 5 உறுப்பினர்களாக பழைய மாணவர்கள் நிபந்தனை அற்ற வகையில் இணைக்கப்பட வேண்டும்.
09) மேற்குறித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு குழு ஏற்படுத்தப்படும் போது பழைய செயற்குழு உறுப்பினர்கள் இருவரும், பழைய மாணவர்கள் இருவருமாக இணைத்தே குழு அமைக்கப்பட வேண்டும்.
10) ஆயினும் இலக்கம் 06,07 ஆகிய கோறிக்கைககள் உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
கல்வி நிறுவனத்தின் இலக்கு தவரான முறையில் நடாத்தப்படும் போதும் அக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் துஸ்பிரயோகப்படுத்தப்படும் போதும் அதனை சீர்படுத்த வேண்டிய தேவை அக் கல்வி நிறுவனத்தின் பழைய மாணவர்களின் உரிமையும் கடமையும் ஆகும்.
இதனையே நாமும் செய்தோம் ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய பதவிகளில் இருக்கின்ற அல்லது இருந்த உத்தியோகத்தர்கள் இல்லத்தின் செயற்குழுவில் இருப்பதனால் தங்களது பிழைகளை மறைந்து எம்மை புறக்கணித்து நசுக்கி வருகின்றனர்
. பல அரச உயர்நிலை உத்தியோகத்தர்களுக்கு எமது பிரச்சினை குறித்து தெரியப்படுத்திய போதும் இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளான எம்மை நசுக்கி தவரான வார்த்தையால் மனதை புண்படுத்தி எமது வாழ்வை கேவலப்படுத்தி வருகின்றனர்.
எனவேதான் நாம் வீதியில் இறங்கி எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளோம்.எனவும் தெரிவிக்கின்றனர். (சி)






