முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்று பிரதேச சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபை அமர்வு, இன்று, தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.
சபையில், 24 உறுப்பினர்கள் இருக்கின்ற போது, 4 உறுப்பினர்கள், இன்று சபைக்கு சமூகமளிக்காத நிலையில், 20 உறுப்பினர்கள் சமூகமளித்தனர்.
இந்த நிலையில், சமூகமளித்த 20 உறுப்பினர்களின் பூரண ஆதரவுடன், 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, சபையிலுள்ள அனைத்து வட்டாரங்களுக்கும், தலா 2.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு-கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் வெற்றி!
