முல்லைத்தீவில் குண்டு வெடித்த இடத்துக்கருகில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் கடந்த நான்காம் திகதி பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அதனை அண்டிய பகுதியில் பொலீஸார், படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது நந்திக்கடல் பகுதியில் ஏ.கே 81 வகை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட படைத்தலைமையக வாசலின் முன்னால் உள்ள மக்களின் காணி ஒன்றிற்குள் எறிகணை ஒன்றும் மக்களால் இனங்காணப்பட்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (நி)

Previous articleகிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி!
Next articleமூன்று தோட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு!