கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாது இரவு வேளைகளில் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளத்தின் கீழுள்ள முரசுமோட்டை சேற்றுக்கண்டி, மருதங்குளம், புலிங்கதேவன், முறிப்பு, ஆகிய பகுதிகளில் பயிர்ச் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு உரியவாறு நீர் வழங்கப்படாது அப்பிரதேசத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இரவு வேளைகளில் பிரதான நீர் விநியோக வாய்க்கால்களை சட்டத்திற்கு மாறாக மறித்து நீர்ப்பாசனம் செய்து வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் உரிய நீர் விநியோகத்திற்கான முகாமைத்துவம் இன்மையால் அதிகமான விவசாயிகள் நீர் விநியோகம் செய்ய முடியாது நீர்ப்பாசனம் செய்ய முடியாது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குறிப்பிட்ட சில விவசாயிகள் தங்களுடைய பயிர்ச் செய்கையை கைவிடும் நிலை காணப்படுகின்றது.

குளத்திலிருந்து திறந்துவிடப்படுகின்ற நீர் இரவு வேளைகளில் நீர்ப்பாசன வாய்க்கால்களில் சில முக்கிய இடங்களில் சட்டத்துக்கு முரணான விதத்தில் மறிக்கப்பட்டு முக்கிய பொறுப்பில் உள்ள கமக்கார அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தமக்கான நீர்ப்பாசனத்தை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் அளவுக்கு அதிகமான நீர் குறிப்பிட்ட சில நீர் விநியோக வாய்க்கால்களில்வாக்களினுடாக வீண்விரயமாகி வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். (நி)

   

Previous articleதங்க ஆபரணங்களுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது!
Next articleமனைவியை கொலைசெய்த குடும்பத்தலைவருக்கு விளக்கமறியல்!