தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால், முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், 25 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதம விருந்தினராக, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் பிரிகேடியர் இசாட் செடின் கலந்துகொண்டார்.
இதன் போது, 17 முன்னாள் போராளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரமும், 8 பேருக்கு மோட்டார் இயந்திரமும், 5 பேர் சேர்ந்த குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பெருமதியான கடல் தொழில் உபகரணங்கள் மற்றும் சுப்பர் படகு என்பன வழங்கி வைக்கப்பட்டன. (சி)