கடந்த பத்துவருடமாக நாம் அனுபவித்துவந்த சுதந்திரம் மீண்டும் இல்லாமல் போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் புதிதாக அமைக்கப்பட்ட விகாரை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த யுத்தம் தொடர்பாக பலர் பேசுகின்றனர். அந்த நீண்ட 30 வருட நடைபெற்ற யுத்தத்தினை மூன்று ஆண்டுகளுக்கு நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தத்திற்கு முடிவு கட்டி நாட்டின் பொருளாதாரத்தினை வளர்ச்சியடை செய்திருந்தோம். கிராம மட்டத்தில் மனிதனின் பேஸ்க்குள் காசு இருந்தது. நாட்டிலும் காசு இருந்தது. அனைத்து திணைக்களங்களும் தமது சேவைகளை வழங்குவதற்கு உரிய பணம் அவர்களிடத்தில் இருந்தது. 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகளின் வருகையாக இருந்த நாட்டை 18 இலட்சமாக மாற்றியதன் பின்னரே நாட்டை ஒப்படைத்தேன். அது பின்னர் 27 இலட்சம் வரை உயர்வடைந்து இன்று பூச்சியத்திற்கு வந்திருக்கின்றது. 2009 மே மாதம் 19 ம் திகதி நாம் பெற்ற சுதந்திரம், நிம்மதி அனைத்தும் ஏப்பிரல் 21ம் திகதியுடன் இல்லாமல் போயுள்ளது. 10 வருடம் நாம் அனுபவித்த சுதந்திரம் இல்லாமல் போய். மீண்டுயும் பயம் பீதி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. காலம் காலமாக நாம் அனுஸ்டித்த மே தினம் வெசாக் பண்டிகையை இம்முறை அனுஸ்டிக்க முடியவில்லை.
இன்று நாட்டில் தான் சார்ந்த இனத்தை, மதத்தை சொல்வதற்கு சிலர் வெக்கப்படுகின்றார்கள். அவ்வாறு யாரும் வெக்கப் பட வேண்டியது இல்லை. அவர் அவர் அவர் அவர் மதத்தை, இனத்தை மார்ப்பு தட்டி சொல்வதில் வெக்கம் வந்துவிடப் போவதில்லை. அது அவர் அவர் உரிமை. நான் பௌத்த மதத்தவன், சிங்கள இனத்தவன் என்று பேசினால் என்னை இனவாதி என்று சொல்லிவிடுவார்கள் என அச்சப் படுகின்றார்கள். சிங்களவர்கள் சொல்வதைப் போன்று தமிழ் மக்களும் சொல்ல முடியும். முஸ்லீம் மக்களும் சொல்ல முடியும். அது தொடர்பில் எந்த பிரச்சினையும் கிடையாது. அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. புலிகள் பயங்கரவாதிகள் என்பதற்காக தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல அதேபோன்று முஸ்லீம் மக்களும் அவ்வாறு அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. நாம் 15 ஆயிரம் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வு அளித்து உறவினர்களிடம் கையளித்தோம். ஆனால் எமது ஆட்சிக்காலத்தில் நாம் அவர்கள் தொடர்பில் கண்காணித்தோம். அவர்கள் தொடர்பில் கவனம்செலுத்தினோம் ஆனால் அவை இன்று இல்லாமல் போனது. நாம் மேற்கொண்டு வந்த பாதுகாப்பு நுட்பங்களை தந்திரங்களை இந்த அரசு இல்லாமல் செய்ததன் விளைவுதான் இன்று நாடு தற்போதய நிலையை எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.