அவசரகால சட்ட நிலைமைகள் குறித்து, இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இந்த வாரம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படவுள்ளது.

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவசரகால சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவசரகால சட்டத்தை நீக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

சர்வதேச இராஜதந்திரிகளை சந்தித்த வேளையிலும், இந்த வாக்குறுதிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை, ஜனாதிபதியினால் மேலும் ஒரு மாத காலத்திற்கு அவசரகால சட்டத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அதனடிப்படையில், அவசரகால சட்ட நிலைமைகள் குறித்து இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இந்த வாரம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படவுள்ளது.

எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. (சி)

Previous articleமக்களுக்காக அமைச்சர் ஆனார் கபிர் ஹாசிம் : ஹக்கீம்
Next article19 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்துக்கள் பொருத்தமற்றவை : ஜயம்பதி விக்ரமரட்ண