வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவின் இணை படைகளின் பிரதானி இதனைத் தெரிவித்துள்ளார்.
வொன்சொன் கிழக்கு துறைமுக நகரில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஜப்பானய கடற்பரப்பில் 430 கிலோமீற்றர் தூரம் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகள் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள
நிலையில், அதுதொடர்பில் வடகொரியா அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிகளுக்கு வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே அணுவாயுத முடக்கல் சம்மந்தமாக அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றிருந்தநிலையில், கடந்த மாதம் 30ம் திகதி இரு நாடுகளின் தலைவர்களும் வட மற்றும் தென் கொரிய எல்லைகளில் சந்திப்பை நடத்தி இருந்தனர்.
இதன்போது மீண்டும் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தீர்மானித்திருந்தனர்.
எனினும் தற்போது வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளமை, இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.(சே)









