உயிர்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு  கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி கூறியுள்ளார்

இன்றைய தினம் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சாட்சியம் அளிப்பதற்காக இதற்கு முன்னர் அழைக்கப்பட்டிருந்த போதும் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.(சே)

Previous articleஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்திற்கு
Next articleஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத்தை அழித்தது சவுதி