உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (31) காலை 10.30 மணி மீண்டும் ஒன்று கூடவுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பாராளுமன்ற தெரிவுக்குழு முன் இன்று தனது சாட்சியங்களை வழங்கவுள்ளார்.
மேலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபிலா விஜயவர்தனவும் இன்று சாட்சியங்களை வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய சாட்சியங்கள் வழங்கும் போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சே)