வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘மீளும் ஆளுமை’ அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது ஆசிரியர்கள் முன்வரிசையில் அமர்வதை தவிர்த்து மாணவர்கள் முன்வரிசையில் அமரவேண்டும் என்று வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இவ்விடயத்தை வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். (நி)

Previous articleஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்தினை அரச உடமையாக்குமாறு விசாரணைக்குழு பரிந்துரை
Next articleபுகையிரத சேவைகள் முழுமையாக தடைப்பட்டது!