ஆடிச் செவ்வாயை முன்னிட்டு ஹட்டன் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நேற்று மாலை விசேட சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
விசேட அபிசேகம், துர்கா கவச பாராயணம், அம்பாள் உள் வீதி உலா வருதல் என்பன இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகள் ஆலய பிரதமகுரு பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
பூஜை வழிபாடுகளில் பெருமளவான பக்த அடியார்கள் உட்பட வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டதை காணமுடிந்தது.
இதேவேளை இன்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் விசேட அலங்கார பூஜைகள் இடம்பெறுவதுடன், இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செலுத்தப்படுகின்றது. (நி)