லசித் மலிங்க ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து விடைபெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி யுராஜ் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யோக்கர் மன்னன் மலிங்கவின் வெற்றிகரமான கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்கள். பந்துவீச்சு மூலம் துடுப்பாட்ட வீரரின் கால் பாதத்தை பதம் பார்க்கும் அவரைப் போல
எதிர்காலத்தில் இன்னொரு பந்து வீச்சாளர் கிடைக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரும், இந்நிய அணியின் துணை அணித்தலைவருமான ரோஹித் சர்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறந்த மட்ச் வின்னர்ஸ் யார் என தெரிவு செய்ய வேண்டும் எனில் நிச்சயம் மலிங்கவே முன்னிலையில் இருப்பார்.
நெருக்கடியான கட்டத்தில் பந்து வீச அழைத்தால் தளராது, அணித்தலைவர்கள் பெரும்மூச்சு விடும் வகையில் மலிங்க செயற்படுவார் என குறிப்பிட்டார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளியிட்ட கருத்தில், இறுதி ஒருநாள் போட்டியில் மலிங்க அற்புதமாக பந்துவீசினார். கிரிக்கெட்டில் அனைத்து விதமான பங்களிப்பையும் அளித்த அவருக்கு நன்றி.
அவர் மீது உயரிய மரியாதை உண்டு அது எப்போதும் தொடரும் என தெரிவித்துள்ளார். (நி)






