இலங்கையில் 43 வருடங்களில் முதல் முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு தூதர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட 4 பேர், தூக்கிலிடப்படவுள்ளனர் என, ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, ஜனாதிபதியின் முடிவுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் கவலை தெரிவித்ததாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.(சி)

Previous articleஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு
Next articleகல்முனையில் போதை எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டம்