30 மில்லியன் ரூபா செலவில் அநுராதபுரம், நாச்சதுவவில் அமைக்கப்பட்ட மரக்கறி மற்றும் பழ விற்பனை மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,
புதிய தொழிநுட்பத்தை தயாரித்து விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், சேதமடைதலை குறைப்பதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் இயலுமாயின், அந்த முறைமையை அடிப்படையாகக் கொண்டு தேசிய விவசாய துறையை நவீனமயப்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
புதிய தொழிநுட்பத்தை விவசாய துறையில் இணைத்து சேமிப்பக மற்றும் குளிர்படுத்தல் மத்திய நிலையம் தம்புள்ள மற்றும் வெலிமடையில் அமைக்கும் நடவடிக்கையை நாம் இப்போது ஆரம்பித்துள்ளதுடன், அவ்வாறான குளிர்படுத்தல் வசதிகளை அமைப்பதற்கு தனியார் துறையை வலுப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.(சே)