மன்னார் – பள்ளிமுனை மீனவர்களின் பிரச்சினை குறித்து அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் பாராமுகாமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கிராம மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும், பொறுப்புள்ள அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் பாராமுகமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டதால் கடலுக்கான நீர் வரத்து குறைவாக காணப்படுவதாகவும், இதனால் தாங்கள் தொடர்சியாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக பல முறை பொறுப்புள்ள அரச அதிகாரிகள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ள மீனவர்கள், பள்ளிமுனை படகு பாதையை சீரமைக்கவும், இறங்குதுறை ஒன்றை அமைக்கவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். (நி)

Previous articleமகிந்தவை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி!
Next articleரஷ்யாவிடம் துருக்கி ஆயுதக் கொள்வனவு! (காணொணி இணைப்பு)