பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவரவாத செயற்பாடுகளின் போது, இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இன, மத கலாசார ரீதியான பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகளை இளைஞர்கள் மத்தியில் தீர்த்துக் கொள்வது தொடர்பான செயலமர்வு, மன்னாரில் இன்று நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மன்னார் வாழ்வுதயத்தில், மன்னார் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதி ஜோசப் நயன் தலைமையில், செயலமர்வு இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் ஏற்பாட்டு செய்யப்பட்டு, 25 மாவட்டங்களிலும் குறித்த செயலமர்வு இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இன்று மன்னாரில் இடம்பெற்ற செயலமர்வில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரீ.பூலோகராஜா, இலங்கை இளைஞர் கழக சம்மேளன உப தலைவர் ஜசோதரன், மடு இளைஞர் சேவை அதிகாரி ராகவேந்தர், மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜேசுராஜ் லோகு உட்பட, மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவபடுத்தும் வகையில் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
செலமர்வின் மூலம், இளைஞர் மத்தியில் சேகரிக்கப்படும் கருத்துக்கள், எதிர்வரும் மாதம், தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள இளைஞர் தினத்தின் போது, விசேட அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது. (சி)








