மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140. 760 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அன்றாடம் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கஞ்சா பொதியுடன் எவரும் கைது செய்யப்படவில்லை.(ம)







