மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால், பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.பேசாலை பகுதியில் நேற்று வரை 90 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே, கிராம மக்களுடன் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சிரமதானத்தை முன்னெடுத்தனர்.
கடற்கரையில் காணப்பட்ட, பாவனைக்கு உதவாத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் நீர் தேங்கக் கூடிய பொருட்கள் என்ப பாதுகாப்பான வகையில் அங்கிருந்து அகற்றப்பட்டன.
கிராம அலுவலர்கள் சுகாதார தரப்பினர் மதத்தலைவர்கள் ஆகியோரும், சிரமதான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
