தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையில், மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி மீட்கப்பட்டுள்ளது.
சீனி தொடர்பில் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் மேயர் ஜாலிய ஓபாதவிடம் வழங்கிய தகவலுக்கு அமைய, தம்புள்ளை பொலிஸாருடன் இணைந்து குறித்த சீனியின் தொகை மீட்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலங்களில் நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு இந்த சீனியை விற்பனை செய்யும் நோக்கில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று தம்புள்ளை மேயர் தெரிவித்தார்.
எந்தவொரு சுகாதாரமான நடைமுறைகளும் இன்றி சீனி நிலத்தில் கொட்டப்பட்டு பின்னர் மீண்டும் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Previous articleவவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை!
Next articleமன்னார் கடலில் காணாமல்போன இரண்டாவது பருத்தித்துறைவாசியும் சடலமாக மீட்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here