கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் பிரதேச மட்ட இலக்கிய விழாவின் போட்டிகள், இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.தனுசியா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகள் யாவும், மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் சிறுவர், கனீஸ்ட பிரிவுக்கான கவிதை பாடல், கையெழுத்துப் பிரதி, ஆங்கில பாடல் போன்றவையும் நடைபெற்றன.

மேலும், திறந்த மட்டம், கனீஸ்ட பிரிவு, சிரேஸ்ட பிரிவு போன்ற மாணவர்களுக்கு பாடல், சிறுகதை, கட்டுரை, கவிதை எழுதுதல், நாடகப் பிரதி போன்ற போட்டிகளும் நடைபெற்றது.

இந்தப் போட்டிகள் அனைத்தும் நடுவர்களின் தெரிவுக்கமைவாக 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்கள் பெறும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இதில் முதலாம் இடம்பெறும் மாணவர்கள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்கு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)

Previous articleதலவாக்கலையில், உணவகங்களில் சோதனை
Next articleமட்டு, காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு