மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரேயோரு சிங்கள கிராமமான மங்களகம கிரமாத்தின் நீண்டகால தேவையாக இருந்த பாலம் கம்பெரலிய திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான நிதியை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஒதுக்கீடு செய்துள்ளார்.
குறித்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்ரடார தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மங்களகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார நிமல் மங்களகம விகாராதிபதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த இடத்தில் பாலம் அமைக்கப்படாமையினால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்பாலம் அமைக்கப்படுவதன் மூலம் இப்பகுதி மக்கள் பெரும் நன்மையடையவுள்ளனர். (சி)






