நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் இன்று தமது புனித நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நோன்பு பெருநாள் தொழுகையினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும் , துவா பிரத்தனைகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையினை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் மௌலவி ஹாபிஸ் மொகமட் நியாஸ் நடத்தி வைத்தார்.
இந்த விசேட பெருநாள் தொழுகை பிராத்தனையில் மட்டக்களப்பு நகர் அனைத்து இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள், நண்பர்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
.