மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதி மக்களினால், மாநகர சபை உறுப்பினர் கே.ரகுநாதனுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மாநகர சபை உறுப்பினர் கே.ரகுநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தில், 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த வீதியினை கொங்ரீட் வீதியாக புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாநகர சபை ஊடாக புனரமைக்கப்படும் வீதியினை, மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர சபை பொறியிளாளர் திருமதி.சித்திராதேவி லிங்கேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் பிரேமதாஸ், மாநகர சபை உறுப்பினர் தம்பிராஜா இராஜேந்திரன், மாநகர சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் ராஜகுமார், மற்றும் மாநகர சபை ஊழியர்களினால், இந்த வேலைத்திட்டம் இன்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. (சி)








