மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு சர்வோதய வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் மாந்தோட்டம் ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து 73 வயதுடைய சாமித்தம்பி கோணேசமூர்த்தி என்ற ஐந்து பிள்ளைகளுடைய தந்தை ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த வயோதிபர் மட்டக்களப்பு சர்வோதய வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தனது பிள்ளைகளுக்கு சொந்தமான மாந்தோட்டத்தை பராமரித்து வந்துள்ள நிலையில் இன்று தனது தந்தையை பார்க்க சென்ற போது தனது தந்தை வீட்டின் மலசல கூட அறையில் இறந்த நிலையில் இருந்துள்ளதாக, குறித்த வயோதிபரின் பிள்ளைகள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் குற்றபுலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)

Previous articleமட்டக்களப்பில் காணி கச்சேரி
Next articleயாழ். கச்சேரி பகுதியில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல்