மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழக மைதானம், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒளியூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கூழாவடி டிஸ்கோ வினையாட்டுக் கழக மைதானத்தில், இரவு நேரங்களில் விளையாட்டுக்களை நடாத்துதல், பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உரிய ஒளி வசதியில்லாத நிலமை காணப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தனது கம்பெரலிய நிதித் திட்டத்தின் ஊடாக, 2 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தார். இதன் காரணமாக, மின்குமிழ்கள் அமைக்கும் பணிகள் இடம்பெற்று நேற்றைய தினம், ஒளியூட்டப்பட்ட மைதானத்தை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர ;ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர்,மைதானத்தை சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர்.
இதேவேளை, கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக்கழகத்தால், 40 வயதுக்கு மேற்பட்ட, அழைக்கப்பட்ட 10 அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டியும் நேற்று இரவு இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில், டிஸ்கோ அணியும், லயிட்டவுஸ் அணியும் மோதின, இதில் டிஸ்கோ கழகம், 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.(மு)










