மட்டக்களப்பில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜா அருண் பிரசாந்த் என்ற இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் உடல் நேற்று மாலை மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக புதிய எல்லை வீதி சின்ன ஊறனியில் உள்ள அவர்களது  இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று காலை சின்ன ஊறனி பொது  மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .

 

Previous articleகிளிநொச்சியில் மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு! (படங்கள் இணைப்பு)
Next article“வாக்குரிமை ஆயுதபலத்தை விட பெறுமதி வாய்ந்தது”